வெளிச்சம்

Sunday, 6 June 2010

வலை உலக தில்லுமுல்லுகள்

Disclaimer / துறவுரை: இந்தக் கட்டுரை விடலைப் பருவம் (Adolescent Period) பற்றிய சில விஷயங்களையும் உள்ளடக்கியது.

எந்த ஒரு புதிய
தொழில்நுட்பம் வந்தாலும் அதில் மிக எளிதாகவும் விரைவாகவும் ஈடுபட்டு கொள்ளை லாபம் பெறுகின்ற துறையாக Porn Industry என்று அழைக்கப்படும் பாலியல் துறை செயல்படுகிறது. நெடு நாட்களாக இந்தத் துறைக்கு தங்கள் நிஜமான இன்பங்களையும், பெற்றோர் கொடுத்த பணத்தையும், ஏன் வாழ்க்கையையே கூட தாரைவார்த்து கொடுத்துவிட்டு இளைஞர்கள் மட்டுமே தவிக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ். இதில் 60% தங்கள் பணத்தையும் குணத்தையும் இழப்பது நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் அதிகம் என்று ஒரு ரிப்போர்ட் கூறுகிறது. முதலில் அச்சுத்துறையில் கால்பதித்தவர்கள் சினிமாவைத்தொடர்ந்து இன்று இன்டெர்நெட் உலகிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். அச்சு மற்றும் சினிமாவில் பணம் மட்டுமே பிரதானமாக குறிவைக்கப்படுகிறது. ஆனால், இன்டெர்நெட் விஷயத்தில் பணத்தை தவிர வேறு என்ன விஷயங்கள் திருடப்படுகின்றன?
  1. நீங்கள் பார்க்கின்ற எல்லா வலைத்தளங்களின் முகவரிகள் (இதை வைத்துக்கொண்டு நிறைய திருட்டு வேலைகள் செய்யலாம்.)
  2. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள்
  3. உங்கள் கணினியில் இருக்கும் (My Documents folder) உங்களுடைய கோப்புகள்
  4. Cookies என்றழைக்கபடும் வலைஉலாவிகள் விட்டுச்செல்லும் தகவல்கள், இன்ன பிற
இந்தத் துறை எந்த சட்டத்தாலும் முடக்கமுடியாத அளவிற்கு அசூர பலம் கொண்டது. இது போன்ற துறையை ஊக்குவித்தும் எதிர்த்தும் பல கட்டுரைகள் மற்றும் திரைப்படங்கள் வெளிவந்துவிட்டது. சமீபத்தில் சீன அரசு மேற்கொண்டுள்ள சைபர் கட்டுப்பாடு முறைகளையும் இங்கே குறிப்பிடுவது முக்கியம். கூகுல் கம்பனியின் சீன அலுவலகம் மூடப்பட்டுவிட்டது என்பது உலகறிந்த விஷயம். என்ன கரணம் என்று ஆராய்ந்ததில் பல உண்மைகள் வெளிப்பட்டாலும், போர்ன் துறையை எதிர்த்து சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு முகமாகத்தான் இந்த வெளியேற்றம். பல வழிகளில் இதற்கு முட்டுக்கட்டை போடும் இந்திய அரசும் முழுதாய் தீர்வு காண முடியவில்லை.

போர்ன் உலகின் அவதாரங்களில் சில:
  1. போர்ன் வீடியோ
  2. போர்ன் போஸ்டர்கள்
  3. போர்ன் வீடியோ விளையாட்டுக்கள் (அம்மாக்கள் மற்றும் அப்பாக்கள் கவனிக்க!)
  4. போர்ன் விளம்பரங்கள்
இது போதாதென்று பலரும் போர்ன் கதைகள் எழுதி பருவ வயதை அடைந்த இளைஞர்களின் மனதை உளவியல் ரீதியாக பாதிக்கின்றார்கள். மேலும் 'ஏ' ஜோக் மற்றும் 'ஏ' கவிதைகள் என்று அனைத்து விதத்திலும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

இந்தக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இதைப் படிக்கின்ற எல்லோரும் (சிலராவது?!?!?!) தங்களுடைய ஹிட் கவுன்ட் ஏறுவதற்காக போர்ன் தொடர்பான விஷயங்களை உபயோகிக்கும் உத்தியை கைவிட்டு, தரமான கட்டுரைகளை எழுத முன்வரவேண்டும். 'ஏ' ரீதியாக எதாவது எழுதவேண்டுமென்றால், பாலியல் கல்வி தொடர்பான உபயோகமுள்ள தகவல்களை எழுதலாம்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒரே ஒருவர் எனக்கு கமென்ட்டில் தெரிவித்தாலும் சந்தோஷபடுவேன்.

நன்றி,
அப்பாவி உலகம்.

Saturday, 5 June 2010

எங்கே சென்றார்கள்?

நேக்கு பொழுது போலேன்னா பக்கத்து வீட்டு மாமியோட சும்மா பேசிக்கிட்டுருப்பேன். நேர்த்து பேசறச்சே ஒரு வயசான தாத்தா வந்து தர்மம் பன்னுங்கோன்னு கேட்டார்.

ஒரு மேட்டர் ஸ்டிரைக் ஆச்சு! செத்த நேரம் கடந்த காலத்த நெனச்சி பாத்தேன். ஒரு நாலு வருஷமா (? நேக்கு தெரிஞ்ச வரையில) நடுத்தர வயசு ஆம்பளைங்க பிச்சை எடுக்கறதை பாக்க முடியல! (Almost!!!) கை கால் நல்லா இல்லாதவா கூட இப்பெல்லாம் பிச்சை எடுக்குறதில்லையோன்னு ஒரு சந்தேகம். ஆனா யாருமே இல்லன்னு சொல்ல முடியாது! But, கம்மியாயிருக்குன்னு நெனைக்கிறேன்.

இவாள்ளாம் எங்கே போணா?

இது யோசிக்க வேண்டிய விஷயமான்னு கூட தோனுச்சு! இருந்தாலும் எங்கேயோ இடிக்கிறது! உங்க யாருக்காச்சு தெரியுமா?

Friday, 21 May 2010

ஒன்னும் ஒன்னும் மூணு!

சுய அறிமுகம்!
பதிவு உலகத்தில் புதிதாய் தடம் பதிக்க வந்த அப்பாவி. இத்தனை நாள் என்ன பண்ணின்டிருந்தே என்று கேட்பவருக்கு பதில். நடக்கிற எல்லா விஷயத்தையும் வேடிக்கை பாத்துண்டிருந்தேன். இப்ப என்ன செய்ய போறேன்னு கேக்கறேளா? வெயிட் பண்ணுங்கோ! என் ப்ளாக் எல்லாம் படிங்கோ! தானா புரியும்.

அதெல்லாம் சரி! தலைப்பு ஒன்னும் புரியலன்னு கேக்கறவாளுக்கு பதில் இங்கே!