Sunday 6 June 2010

வலை உலக தில்லுமுல்லுகள்

Disclaimer / துறவுரை: இந்தக் கட்டுரை விடலைப் பருவம் (Adolescent Period) பற்றிய சில விஷயங்களையும் உள்ளடக்கியது.

எந்த ஒரு புதிய
தொழில்நுட்பம் வந்தாலும் அதில் மிக எளிதாகவும் விரைவாகவும் ஈடுபட்டு கொள்ளை லாபம் பெறுகின்ற துறையாக Porn Industry என்று அழைக்கப்படும் பாலியல் துறை செயல்படுகிறது. நெடு நாட்களாக இந்தத் துறைக்கு தங்கள் நிஜமான இன்பங்களையும், பெற்றோர் கொடுத்த பணத்தையும், ஏன் வாழ்க்கையையே கூட தாரைவார்த்து கொடுத்துவிட்டு இளைஞர்கள் மட்டுமே தவிக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ். இதில் 60% தங்கள் பணத்தையும் குணத்தையும் இழப்பது நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் அதிகம் என்று ஒரு ரிப்போர்ட் கூறுகிறது. முதலில் அச்சுத்துறையில் கால்பதித்தவர்கள் சினிமாவைத்தொடர்ந்து இன்று இன்டெர்நெட் உலகிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். அச்சு மற்றும் சினிமாவில் பணம் மட்டுமே பிரதானமாக குறிவைக்கப்படுகிறது. ஆனால், இன்டெர்நெட் விஷயத்தில் பணத்தை தவிர வேறு என்ன விஷயங்கள் திருடப்படுகின்றன?
  1. நீங்கள் பார்க்கின்ற எல்லா வலைத்தளங்களின் முகவரிகள் (இதை வைத்துக்கொண்டு நிறைய திருட்டு வேலைகள் செய்யலாம்.)
  2. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள்
  3. உங்கள் கணினியில் இருக்கும் (My Documents folder) உங்களுடைய கோப்புகள்
  4. Cookies என்றழைக்கபடும் வலைஉலாவிகள் விட்டுச்செல்லும் தகவல்கள், இன்ன பிற
இந்தத் துறை எந்த சட்டத்தாலும் முடக்கமுடியாத அளவிற்கு அசூர பலம் கொண்டது. இது போன்ற துறையை ஊக்குவித்தும் எதிர்த்தும் பல கட்டுரைகள் மற்றும் திரைப்படங்கள் வெளிவந்துவிட்டது. சமீபத்தில் சீன அரசு மேற்கொண்டுள்ள சைபர் கட்டுப்பாடு முறைகளையும் இங்கே குறிப்பிடுவது முக்கியம். கூகுல் கம்பனியின் சீன அலுவலகம் மூடப்பட்டுவிட்டது என்பது உலகறிந்த விஷயம். என்ன கரணம் என்று ஆராய்ந்ததில் பல உண்மைகள் வெளிப்பட்டாலும், போர்ன் துறையை எதிர்த்து சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு முகமாகத்தான் இந்த வெளியேற்றம். பல வழிகளில் இதற்கு முட்டுக்கட்டை போடும் இந்திய அரசும் முழுதாய் தீர்வு காண முடியவில்லை.

போர்ன் உலகின் அவதாரங்களில் சில:
  1. போர்ன் வீடியோ
  2. போர்ன் போஸ்டர்கள்
  3. போர்ன் வீடியோ விளையாட்டுக்கள் (அம்மாக்கள் மற்றும் அப்பாக்கள் கவனிக்க!)
  4. போர்ன் விளம்பரங்கள்
இது போதாதென்று பலரும் போர்ன் கதைகள் எழுதி பருவ வயதை அடைந்த இளைஞர்களின் மனதை உளவியல் ரீதியாக பாதிக்கின்றார்கள். மேலும் 'ஏ' ஜோக் மற்றும் 'ஏ' கவிதைகள் என்று அனைத்து விதத்திலும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

இந்தக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இதைப் படிக்கின்ற எல்லோரும் (சிலராவது?!?!?!) தங்களுடைய ஹிட் கவுன்ட் ஏறுவதற்காக போர்ன் தொடர்பான விஷயங்களை உபயோகிக்கும் உத்தியை கைவிட்டு, தரமான கட்டுரைகளை எழுத முன்வரவேண்டும். 'ஏ' ரீதியாக எதாவது எழுதவேண்டுமென்றால், பாலியல் கல்வி தொடர்பான உபயோகமுள்ள தகவல்களை எழுதலாம்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒரே ஒருவர் எனக்கு கமென்ட்டில் தெரிவித்தாலும் சந்தோஷபடுவேன்.

நன்றி,
அப்பாவி உலகம்.

4 comments:

  1. நியாயமான, தேவையான கட்டுரை. நன்றி. (பின்னுட்டமிடலில் வேர்ட் வெரிபிகேஷன் கஷ்டப்படுத்துகிறது. அதை நீக்கிக்கொள்ளலாமே)

    ReplyDelete
  2. கட்டுரையின் நோக்கம் ஓ.கே., ஆனால் முழுமையாய் இல்லை. ஸாரி.

    ReplyDelete
  3. @Janakiraman: Word verification is removed now.

    @velumani: Please provide your inputs to improve this article. Also, I expect this from every reader.

    Thank you for your comments.

    ReplyDelete
  4. கருத்துக்கள் கச்சிதம். இன்னும் சில நுணுக்கமான தகவல்கள்
    தேவைப்படுகின்றன. தற்கால இளைய தாய்மார்களும் தந்தைமார்களும் படித்து
    பயன்பெற வேண்டிய தகவல்கள்.

    தங்கள் குழந்தை உபயோகிக்கும் கணினியில் தக்க பாதுகாப்பு மென்பொருள்களை
    நிறுவி அவர்கள் இது போன்ற தளங்களை பார்க்காமல் தடுத்து விடலாம். இன்றைய
    சூழலில், குழந்தைகளுக்கு பொது ஊடகத்தில் இருக்கும் தகவல்களை தருவதற்கு
    முன்னர் தணிக்கை செய்து தரவேண்டியுள்ளது. ஆனால் இன்று எல்லா தகவல்களுமே
    தணிக்கை செய்யும் அளவில்தான் உள்ளன என்று நினைக்கும் போது ஊடகமே
    தேவையில்லை என்றும் தோன்றுகிறது. என்ன கொடுமை இது. என்று தணியும் எங்கள்
    எல்லா தாகமும்?

    தணிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டி இளைஞர்களை இது தாக்கும் சக்தி படைத்தது
    என்ற கருத்து உங்கள் கட்டுரையில் இருந்து தெளிவாக தெரிகிறது. தமிழ்
    ஊடகங்களின், ஒரு பகுதியான பதிவுலகம் மட்டும் மாற்றத்திற்கு உட்பட்டால்
    மட்டும் போதாது. ஆனால் இது ஒரு ஆரம்பமாக இருக்குமென்றால், பதிவுலக
    நண்பர்கள் இதற்கு இயைந்தால், கட்டாயம் ஒரு மாற்றத்திற்கான அடிக்கல் இங்கே
    நடப்பட்டுவிட்டது. பதிவுலகம் என்பது படித்த பண்புள்ள, பல்லூடங்கங்களின்
    தொடர்பும் உள்ள நிறைய பெரிய மனிதர்களை உள்ளடக்கியது. சமீபத்தில்
    பதிவுலகமும் ஊடக உலகத்தில் பலராலும் கவனிக்கும் ஒரு ஊடகமாக மாறிவருகிறது.
    எனவே இங்கே ஆரம்பிக்கும் மாற்றம் கட்டாயம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
    ஒட்டு மொத்த போர்ன் உலகை அழிக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் பரவாமல்
    தடுக்கும்.

    நாம் இணைந்து செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். பதிவுலக நண்பர்கள்
    கை கொடுப்பார்கள். நம்புங்கள் "அப்பாவி".

    ReplyDelete