எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதில் மிக எளிதாகவும் விரைவாகவும் ஈடுபட்டு கொள்ளை லாபம் பெறுகின்ற துறையாக Porn Industry என்று அழைக்கப்படும் பாலியல் துறை செயல்படுகிறது. நெடு நாட்களாக இந்தத் துறைக்கு தங்கள் நிஜமான இன்பங்களையும், பெற்றோர் கொடுத்த பணத்தையும், ஏன் வாழ்க்கையையே கூட தாரைவார்த்து கொடுத்துவிட்டு இளைஞர்கள் மட்டுமே தவிக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ். இதில் 60% தங்கள் பணத்தையும் குணத்தையும் இழப்பது நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் அதிகம் என்று ஒரு ரிப்போர்ட் கூறுகிறது. முதலில் அச்சுத்துறையில் கால்பதித்தவர்கள் சினிமாவைத்தொடர்ந்து இன்று இன்டெர்நெட் உலகிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். அச்சு மற்றும் சினிமாவில் பணம் மட்டுமே பிரதானமாக குறிவைக்கப்படுகிறது. ஆனால், இன்டெர்நெட் விஷயத்தில் பணத்தை தவிர வேறு என்ன விஷயங்கள் திருடப்படுகின்றன?
- நீங்கள் பார்க்கின்ற எல்லா வலைத்தளங்களின் முகவரிகள் (இதை வைத்துக்கொண்டு நிறைய திருட்டு வேலைகள் செய்யலாம்.)
- உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள்
- உங்கள் கணினியில் இருக்கும் (My Documents folder) உங்களுடைய கோப்புகள்
- Cookies என்றழைக்கபடும் வலைஉலாவிகள் விட்டுச்செல்லும் தகவல்கள், இன்ன பிற
போர்ன் உலகின் அவதாரங்களில் சில:
- போர்ன் வீடியோ
- போர்ன் போஸ்டர்கள்
- போர்ன் வீடியோ விளையாட்டுக்கள் (அம்மாக்கள் மற்றும் அப்பாக்கள் கவனிக்க!)
- போர்ன் விளம்பரங்கள்
இந்தக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இதைப் படிக்கின்ற எல்லோரும் (சிலராவது?!?!?!) தங்களுடைய ஹிட் கவுன்ட் ஏறுவதற்காக போர்ன் தொடர்பான விஷயங்களை உபயோகிக்கும் உத்தியை கைவிட்டு, தரமான கட்டுரைகளை எழுத முன்வரவேண்டும். 'ஏ' ரீதியாக எதாவது எழுதவேண்டுமென்றால், பாலியல் கல்வி தொடர்பான உபயோகமுள்ள தகவல்களை எழுதலாம்.
என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒரே ஒருவர் எனக்கு கமென்ட்டில் தெரிவித்தாலும் சந்தோஷபடுவேன்.
நன்றி,
அப்பாவி உலகம்.